எங்கிருந்த போதும் உன்னை-பாடல் 136-engiruntha pothum unnai

“எங்கிருந்த போதும் உன்னை”

சுசீலாவின் குளுமைக் குரலில் ஒலிக்கும் இப்பாடலை எங்கிருந்தபோதும் மறக்க முடியுமா!

காலத்தை வென்று நிற்கும் இந்தக் காவியப் பாடலை கே.வி. மகாதேவன் கீரவாணி ராகத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி அமைத்துள்ளதாக இசை விற்பன்னர் கருத்து.

காதலின் பிரிவு, அதுவரை அனுபவித்த துயர்கள் அனைத்தையும் மிஞ்சுமளவு பெருந்துயராகத் தென்படுகிறது.

காதலனின் பிரிவுக்குப் பின்னர் அவளது நினைவு முழுதும் அவனுடன் பழகிய நாட்களையும் நிகழ்ச்சிகளையும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தும் சோகத்தில் மூழ்கியும் இருக்கும் நிலையை அழகாக படம் பிடிக்கும் வரிகள்.

“கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்”

இதை சுசீலாம்மா பாடும்போது
காற்றிலாடும் ரோஜா கையில் கிடைத்த இன்பம் உறுதி.
————————–
படம்: நீங்காத நினைவு
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் வாலி
குரல்: பி.சுசீலா
————————-
பாடல் வரிகள்:

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா? ஆஆஆ
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆஆஆஆ ஆ

இப்பாடலின் You Tube link கீழே தரப்பட்டுள்ளது.