மூங்கிலிலே பாட்டிசைக்கும்-பாடல் 418-moongilile pattisaikum

“மூங்கிலிலே பாட்டிசைக்கும்”

80 களில் இளையராஜாவின்  இசைப்பிரம்மாண்டத்தை சமாளித்து இசைப்பயணம் மேற்கொள்ள முடிந்த ஒரே இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் எனலாம்.

அஷ்டாவதானி போல பல திறமைகளை கொண்ட அவர் எழுதி இசையமைத்த, இந்தப் பாடலைக் கேட்டால் அவரது இசை வீச்சு புலப்படும்.

அலைபுரளும் கடற்கரையில் நாயகன் சங்கர் ஓடிவருவதை ஸ்லோ மோஷனில் காட்சி படம்பிடிக்க, ட்ரம்ஸின் ரிதத்தில் மென் சினுங்களாய் தொடங்கும்  அந்த கிடார், தொடரும் குழல் என்று காலை நேர கடற்கரையின் கிளுகிளுப்பை இசையிலேயே கொடுத்திருப்பார்.

கரையைத் தொட்டு பின்வாங்கும் கடல்நீரை படம்பிடித்த விதமும் பிண்ணனி இசையும் நம் காலடியில் மண்ணரிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும்.

பாடல் முழுவதுமே கடலையும் அலைகளையும் ஒரு கவிதையாக படம் பிடித்திருப்பார்.

பாலுவின் குரலில்தான் எத்தனை ஜாலங்கள்.
“அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை” இதை இரண்டாவது முறை பாடும்போது ஒரு சின்ன ‘களுக்’ சிரிப்பு….சரணங்களின் இடையே ஹம்மிங், சங்கதிகள் என்று சர்வ சுதந்திரமாக பாடி இருப்பார்.

“நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்”

“என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கிலிலே ஹா ஹா ஹா ஹா”

“பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ காற்றலையை ஹெ ஹெ ஹெ ஹெ தூதுவிட்டேன் தரர தரர தரர தரர”

சிம்ப்ளி சூப்பர்ப் பாலு சார்!
—————————-
படம்: ராகம் தேடும் பல்லவி (1982)
இசை: டி.ராஜேந்தர்
வரிகள்: டி.ராஜேந்தர்
குரல்: எஸ்.பி.பி
——————————–
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ
இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
புது புது வார்த்தை தினம் தினம் தேடி பார்வையில் அமுதாய் அவள் வடித்தாள்
நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கிலிலே ஹா ஹா ஹா ஹா பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ காற்றலையை ஹெ ஹெ ஹெ ஹெ தூதுவிட்டேன் தரர தரர தரர தரர

ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச் சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக் கொண்டது
ஆ ஆ ஆ ஆ ஆ
மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே சென்னிறமானது
ஹை ஹை ஹை ஹை
அவள் வரம் தரவே சென்னிறமானது
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்