தை பொங்கலும் வந்தது-பாடல் 423-thai pongalum

“தை பொங்கலும் வந்தது”

மகாந்தி படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுத கமலும் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதி சந்தானபாரதி இயக்கினார்.

படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா.

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாடல் தொட்டு ‘தை பொங்கலும் வந்தது’ பாடல் வரை பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி.

காவிரி கரையின் செழிப்பையும், பசுமையையும் காட்சியாக காமிரா படம் பிடிக்க, மண்ணின் மனம் கமழும் மங்கல கருவிகளோடு இசையாக படம் பிடித்திருப்பார் ராஜா…

பொங்கல் என்றாலே கமல், இளையராஜா கூட்டணியின் ’தைப் பொங்கலும் வந்தது பாலும் பொங்குது’ பாடல் என்றாகிவிட்டது.
————————
படம்:மகா நதி
இசை: இளையராஜா
குரல்: K.S.சித்ரா
வரிகள்: வாலி
—————————–
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ

வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றிசொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

ஹே தைய தியான் தக்கு தியா தக்கு
ஹே தைய தியான் தக்கு தியா தக்கு

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி