உடலுக்கு உயிர் காவல்-பாடல் 420-udalukku uyir kaaval

“உடலுக்கு உயிர் காவல்”

வாழ்க்கை சில நேரங்களில் நம்மை கசக்கிப் பிழிந்து தனிமையில் நிறுத்தி கேள்விக்கணைகளை வீசும்.

அப்படி ஒரு அனுபவத்தை உணரவைக்கும் பாடல் இது. கவியரசரின் கவிதை வரிகளில் ஆழ்ந்து செல்லும் நீரோடையைப் போல் கேள்விகளோடு பயணிக்கும் பாடல்.

“சட்டம் என்பது வெளிக் காவல்
தர்மம் என்றால் அது மனக்காவல்
இரண்டும் போன பின் எது காவல்?”

“காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?…காவல் காவல்….”

இங்கு சோக இழை சற்று உரக்கவே பின்னணியிலும் பாடலிலும் ஒலிக்கும்.

“அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்???யார் காவல்…யார் காவல்???”

விடையில்லாக் கேள்வியுடன் பாடல் நிறைவு பெறுகிறது…இது ஒரு  சூழ்நிலைப் பாடல். காட்சிக்கு பொருந்துவது மட்டுமல்ல  விடை காணமுடியா புதிர்களால் வாழ்க்கை நம்மை அலைக்கழிக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் பாடல்.

கஜல் இசை பாணியில் இசைக்கோர்வையும் பின்னணி வாத்தியக் கருவிகளும்…அதுவும் அந்த சாரங்கி… உணர்வுகளை பிழிந்து எடுக்கும்.

வரியும் இசையுமே பாடலை நிலை நிறுத்த இயலுமா?அதற்கேற்ற ஒரு குரல். அந்தக் குரலும் மென்குரல். அதில்தான் எத்தனை உணர்ச்சி பாவங்கள்!
—————————-
படம் : மணப்பந்தல்
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
குரல் : பி.பி ஸ்ரீனிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
——————————
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்

சட்டம் என்பது வெளிக் காவல்
தர்மம் என்றால் அது மனக்காவல்
இரண்டும் போன பின் எது காவல்?
எது காவல்? யார் காவல்? எது காவல்?

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்

காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?
காவல் காவல் ஆ..
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? அவள்
மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்? யார் காவல்?

உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்