தேடினேன் வந்தது நாடினேன் தந்தது-பாடல் 425-thedinen vanthathu

கே.ஆர். விஜயா, பாலையாவின் மகள் தான்தான் என்று ஆள்மாறாட்டம் செய்து வீட்டில் நுழைந்து விடுவார். தன் திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி கொப்பளிக்க பாடும் பாடல்.

நாயகன் சிவாஜி

ஆங்கிலத்தில் பெப்பி சாங் என்பார்களே அப்படி ஒரு துள்ளல் இசைப் பாடல்.

சிறப்பான இசைக் கோர்வை, பாடியிருக்கும் சுசீலாம்மாவின் டைனமிக்ஸ் அற்புதப்படுத்தும் பாடல்.

“தேடினேன் வந்தது……”
அதைத் தொடரும் ரிதம்… மெல்லிசைமன்னரின் அற்புத படைப்பு. இது ஒரு மேற்கத்திய பாடல் ரகம்.

நாடினேன் தந்தது….
வாசலில் நின்றது…..
வாழவா என்றது…..
கீழே ஆரம்பித்து படிப் படியாக உயரும் குரல் வண்ணம்…

வாசலில்…..அந்த “லில்” சொல்லும் சங்கதி மனதை வருட,”வாழ வா என்றது…” என்பதில் வரும் “வா” நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும். தொடரும் கிடார், வயலின், அக்கார்டின்.
ஆஹா! இதுவல்லவா சொர்க்கம்!

“என் மனத்தில் ஒன்றைப்
பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி…
நான் இனி பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றி….”

“பெண் என்றால் தெய்வ மாளிகைத் திறந்து கொள்ளாதோ…”…தோ..ஓ…ஓ..ஓ….இதுதான் விப்ராட்டோ!( Vibrato- குரல் அதிர்வலை) அசத்தல்…

‘இனி கலக்கம் ஒன்றும் இல்லை..இதில் விளக்கம் சொல்வதும் இல்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு மயக்கம் உண்டு நெஞ்சே…”

பாடலின் இசை அமைப்பு பாடல் பாடி இருக்கும் விதம்…
குரலின் டைனமிக்ஸ்…..
காலத்துக்கும் நிற்கும் பாடல்….

காது முழுவதும் ட்ரம்ஸ், பாங்கோஸின் தாக்கம் பாடல் முடிந்த பின்னும் தொடரும்!

—————————
படம்:ஊட்டி வரை உறவு
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா
—————————–
பாடல் வரிகள்:

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ
ஓ..ஓஹோ…ஓ..ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..
ஓ…ஹோ…ஓஹோ…ஓ…ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது

இப்பாடலின் You Tube link கீழே தரப்பட்டுள்ளது.