தேடினேன் வந்தது நாடினேன் தந்தது-பாடல் 425-thedinen vanthathu

கே.ஆர். விஜயா, பாலையாவின் மகள் தான்தான் என்று ஆள்மாறாட்டம் செய்து வீட்டில் நுழைந்து விடுவார். தன் திட்டம் நிறைவேறியதாக மகிழ்ச்சி கொப்பளிக்க பாடும் பாடல். நாயகன் சிவாஜி ஆங்கிலத்தில் பெப்பி சாங் என்பார்களே அப்படி ஒரு துள்ளல் இசைப் பாடல். சிறப்பான இசைக் கோர்வை, பாடியிருக்கும் சுசீலாம்மாவின் டைனமிக்ஸ் அற்புதப்படுத்தும் பாடல். "தேடினேன் வந்தது......"அதைத் தொடரும் ரிதம்... மெல்லிசைமன்னரின் அற்புத படைப்பு. இது ஒரு மேற்கத்திய பாடல் ரகம். நாடினேன் தந்தது....வாசலில் நின்றது.....வாழவா என்றது.....கீழே ஆரம்பித்து படிப் … Continue reading தேடினேன் வந்தது நாடினேன் தந்தது-பாடல் 425-thedinen vanthathu

சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley

"சிலர் குடிப்பது போலே நடிப்பார்" மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் . “சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..! மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். … Continue reading சிலர் குடிப்பது போலே நடிப்பார்-பாடல் 424-silar kudippathu poley

தை பொங்கலும் வந்தது-பாடல் 423-thai pongalum

"தை பொங்கலும் வந்தது" மகாந்தி படத்தின் கதையையும் திரைக்கதையையும் கமல்ஹாசன் எழுத கமலும் ரா.கி.ரங்கராஜனும் இணைந்து வசனம் எழுதி சந்தானபாரதி இயக்கினார். படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா. கதையின் கனத்தை மேலும் கனமாக்கி நமக்குள் இசைவழியே கடத்தியிருந்தார் இளையராஜா. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாடல் தொட்டு 'தை பொங்கலும் வந்தது' பாடல் வரை பாடல்களிலும் பின்னணியிலும் கதையின் உணர்வுகளைக் குலைக்காமல், அதேசமயம் அதை இன்னும் மிக கனமாக நமக்குள் ஊடுருவச் செய்திருப்பார் இசைஞானி. காவிரி கரையின் … Continue reading தை பொங்கலும் வந்தது-பாடல் 423-thai pongalum

பூ வாசம் புறப்படும் பெண்ணே-பாடல் 422-poovasam purappadum

"பூ வாசம் புறப்படும் பெண்ணே" புதிதாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் தனது கட்டிடத்தின் சுவற்றில் மிகப்பெரிய ஓவியம் ஒன்று அமையவேண்டும் என்று உழைப்பாளர்களை சுரண்டிக் கொழுத்த பெருமுதலாளி ஒருவர் ஆசைப்படுகிறார். மகளின் தோழர் என்பதால் ஒரு ஓவியரை வரச்சொல்லி ஓவியம் தீட்டச் சொல்கிறார். ஆஷாடபூதியாக விளங்கும் அவரது இயல்புக்கேற்ப, சிவபெருமானின் ஓவியத்தைத் தீட்டுகிறான் ஓவியன். ஆனால் அதனுள் கார்ல் மார்க்ஸும் கம்யூனிஸமும் தொள்ளாயிரத்துப்பத்தும் ஒளிந்திருக்கின்றன. அப்போதுதான் முதலாளிக்கு ஓவியன் ஒரு பொதுவுடைமைவாதி என்பது புரிகிறது. இத்தகைய சிச்சுவேஷன் பொதுவாக எப்படி … Continue reading பூ வாசம் புறப்படும் பெண்ணே-பாடல் 422-poovasam purappadum

ஒரு நாள் யாரோ-பாடல் 421-oru naal yaro

"ஒரு நாள் யாரோ" கே.பாலச்சந்தர்  இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த். அவருக்கு சிறிய வேடம் என்பதால் ஏமாற்றமானாராம். பிரபல பத்திரிகையாளர் டி.ஏ.நரசிம்மன் இவ்வாறு எழுதியுள்ளார். -எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாகப் பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்த நேரம்... ஏவிஎம் நிறுவனம் புதிய படம் ஒன்றில் தங்களை ஒப்பந்தம் செய்ய அணுகியது. படத்தில் நீங்கள் கதாநாயகி என்று மட்டும்தான் தங்களிடம் முதலில் கூறப்பட்டது. படத்தின் இயக்குநர் அப்போது பெரிய ஜாம்பவான் இல்லையென்றாலும், அதற்குரிய தகுதிகள் அவருக்குத் … Continue reading ஒரு நாள் யாரோ-பாடல் 421-oru naal yaro

உடலுக்கு உயிர் காவல்-பாடல் 420-udalukku uyir kaaval

"உடலுக்கு உயிர் காவல்" வாழ்க்கை சில நேரங்களில் நம்மை கசக்கிப் பிழிந்து தனிமையில் நிறுத்தி கேள்விக்கணைகளை வீசும். அப்படி ஒரு அனுபவத்தை உணரவைக்கும் பாடல் இது. கவியரசரின் கவிதை வரிகளில் ஆழ்ந்து செல்லும் நீரோடையைப் போல் கேள்விகளோடு பயணிக்கும் பாடல். "சட்டம் என்பது வெளிக் காவல்தர்மம் என்றால் அது மனக்காவல்இரண்டும் போன பின் எது காவல்?" "காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?...காவல் காவல்...." இங்கு சோக இழை சற்று உரக்கவே பின்னணியிலும் பாடலிலும் ஒலிக்கும். … Continue reading உடலுக்கு உயிர் காவல்-பாடல் 420-udalukku uyir kaaval

ஏதோ மனிதன் பிறந்து விட்டான்-பாடல் 419-yetho manithan

"ஏதோ மனிதன் பிறந்து விட்டான்" மனிதனின் நிலையற்ற குணத்தை மிகவும் அழகாக எடுத்தியம்பும் ஒரு இனிய கீதமாகும். பிறந்தவுடனேயே தாயைப் பறிகொடுத்த ஒரு பெண்ணை, ராசி இல்லாதவள் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைக்கும் சமூகத்தால் அவள் வாழ்வில் சந்திக்கும் சோதனைகளையும், வேதனைகளையும் மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம் 'பனித்திரை' "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி"என்று 'அரசிளங்குமாரி' படப் பாடலில் சிறுபிள்ளைக்கு அறிவுரை சொல்வதுபோல நயமாக சொல்லியிருப்பார் பட்டுக்கோட்டை. "ஏதோ மனிதன் பிறந்து … Continue reading ஏதோ மனிதன் பிறந்து விட்டான்-பாடல் 419-yetho manithan

மூங்கிலிலே பாட்டிசைக்கும்-பாடல் 418-moongilile pattisaikum

"மூங்கிலிலே பாட்டிசைக்கும்" 80 களில் இளையராஜாவின்  இசைப்பிரம்மாண்டத்தை சமாளித்து இசைப்பயணம் மேற்கொள்ள முடிந்த ஒரே இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் எனலாம். அஷ்டாவதானி போல பல திறமைகளை கொண்ட அவர் எழுதி இசையமைத்த, இந்தப் பாடலைக் கேட்டால் அவரது இசை வீச்சு புலப்படும். அலைபுரளும் கடற்கரையில் நாயகன் சங்கர் ஓடிவருவதை ஸ்லோ மோஷனில் காட்சி படம்பிடிக்க, ட்ரம்ஸின் ரிதத்தில் மென் சினுங்களாய் தொடங்கும்  அந்த கிடார், தொடரும் குழல் என்று காலை நேர கடற்கரையின் கிளுகிளுப்பை இசையிலேயே கொடுத்திருப்பார். … Continue reading மூங்கிலிலே பாட்டிசைக்கும்-பாடல் 418-moongilile pattisaikum

அந்த சிவகாமி மகனிடம்-பாடல் 417-antha sivagami maganidam

"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி" வீணையின் தந்திகளில் புன்னகை அரசியின் விரல்கள் நர்த்தனமாட மலர்விழிகள் சுற்றி சுழல, கோவை செவ்வாயோ கதைகள் பல சொல்ல ஸ்வரங்களின் ஒலி நாத உபாசனையாக சிலுசிலுவென மேலெழுந்து படர இது ஒரு தெய்வீக காதல் பாடல் என்று ஆரம்பமே உணர்த்திவிடும். வீணையிசையின் முடிவில் எழும் சுசீலாம்மாவின் ஆலாபனை... ஆஹா! அதுவும் ஒரு கந்தர்வ ஓசை. நாயகனின் முன்னால், பொது சபையில் அமர்ந்து பாடுகிறாள் நாயகி. பாடல் சிவகாமியின் (பார்வதி தேவி) … Continue reading அந்த சிவகாமி மகனிடம்-பாடல் 417-antha sivagami maganidam

ஆலயமணியின் ஓசையை-பாடல் 416-aalaya maniyin osayai

“ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” தபலாவின் நிலையான ரிதத்தில் தார் சாலையில் ஓடும் சொகுசு கார் போல சீரான வேகத்தில் ஒலிக்கும் இப்பாடலை கேட்கும் சுகமே அலாதி. முன்னிசையில் வேகமாய் ஒலிக்கும் வயலின்களும் கிதாரின் மெல்லிய இசையும் ஒரு நவீனத்துவ உணர்வை தரும் பாடல். இந்தப் பாடலின் பின்னணியில் ஏதோ ஒரு செவ்வியல் இசையின் ராகம் அடித்தளமாக இருக்கக் கூடும். அந்த ராகம் முழுமையாய் வெளிப்பட்டாலும் இல்லையெனினும் கேட்கும் பாமரர்க்கு பாடலின் சுகானுபவத்தில் ஒரு துளியும் குறைவு … Continue reading ஆலயமணியின் ஓசையை-பாடல் 416-aalaya maniyin osayai